ராமேசுவரம்: ராமேசுவரம் கோவிலின் மகா கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு பிறகு 2014ல் நடைபெற உள்ளது. இந்த மகா கும்பாபிஷே கத்திற்காக கோயிலில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. பிரசித்தி பெற்ற 3ம் பிர காரம் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கோயிலில் சுவாமி -அம்பாள் சன்னதி அமைந்துள்ள 1ம் பிரகாரத்தில் திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.