பதிவு செய்த நாள்
14
நவ
2013
06:11
காரைக்கால்: திருநள்ளார் கோவிலுக்கு ரூ.3.8 கோடியில் தங்கத் தேர் மற்றும் ரூ.60 லட்சம் மதிப்பில் சொர்ணகணபதி, சண்டீகேஸ்வரர், சுப்பிரமணியன் ஆகிய சுவாமிகளுக்கு தேர் செய்ய கட்டுமான பணிகளுக்கு தொடக்க விழா நடந்தது. காரைக்கால் திருநள்ளார் உலக பிரசித்துபெற்ற தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது.இக்கோவிலில் தனி சன்னதி கொண்டு சனீஸ்வர பகவான் அருள்பாலித்து வருகிறார்.சனிக்கிழமைகளில் பல்வேறு மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரமோற்சவ விழாவின்போது தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்டத்தில் தியாகராஜர்,நீலோத்தாம்பால் ஆகிய தேர்கள் உள்ளது.இதனால் சொர்ணா கணபதி,சுப்பிரமணியர்,சண்டிகேஸ்வரர் ஆகிய மூன்று சுவாமிகளுக்கு தேர் இல்லாத நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தேர் செய்ய கோயில் நிர்வாகத்திடம் வலியுறுத்திவந்தனார்.பிரகாரத்தில் சுற்றி வருவதாற்கு சனீஸ்வரனுக்கு தங்க தேர் செய்ய பக்தர்கள் கூறியுள்ளனர்.இனால் கோயில் நிர்வாக சார்பில் தங்க தேர் செய்ய முடிவு செய்துள்ளது.இதற்கு புதுச்சேரி அரசு ஒப்புதல் பெற்று ரூ.3.8 கோடியில் தங்கத் தேர் மற்றும் ரூ.60 லட்சம் மதிப்பில் சொர்ணகணபதி,சண்டீகேஸ்வரர்,சுப்பிரமணியன் ஆகிய சுவாமிகளுக்கு தேர் செய்ய கட்டுமான பணிகளுக்குதொடக்க விழா நேற்று திருநள்ளார் தேர் நிலையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி ராஜராஜன்வீரசாமி தலைமை தங்கினார்.கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள்,சிறப்பு அழைப்பாளராக எம்.எல்.ஏ.,சிவா முன்னிலை வகித்தார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சுவாமிநாதன்,சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டனர். கோயில் நிர்வாக அதிகாரி கூறியது.கோவிலுக்கு தங்க தேர் செய்ய பக்தர்களின் நன்கொடையின் மூலமாக இந்த தங்க தேர் செய்ய முடிவு செய்யப்பட்டது.காக்க வாகனத்துடன் கூடிய தங்க தேர்,சுமார் 11 கிலோ தங்கம்,300 கிலோ காப்பர்,100 சதுர கன அடி தேக்கு மரங்களுடன் 14 அடி உயரமும்,7 அடி அகலத்துடன் அமைக்கப்பட உள்ளது.இதற்கு ஒரு கமிட்டி உள்ளது.இந்த கமிட்டி மூலம் இப்பணிகள் நடைபெறும்.தங்க தேர் செய்வதம் மூலம் திருமண ஆகாதவர்கள்,திருமணநாள், பிறந்தநாள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தேர் இழுக்க விரும்புவோர்கள் கோவிலில் கட்டணத்தை செலுத்தவேண்டும்.மேலும் சண்டிகேஸ்வர் 7 அடி உயரம்,9 அடி அகலம், சொர்ண கணபதி 13 அடி உயரம்,15 அகலம்,சுப்பிரமணியர் 12 அடி உயரம்,13 அடி அகலத்தில் இழுப்ப மரத்தில் தேர் செய்யும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டது.இத்தேர் வரும் பிரமோற்சவ விழாவிற்குள் பணிகள் முடிக்கப்பட்டு தேர் வெள்ளோட்டம் நடைபெறும் என்று கூறினார்.