பதிவு செய்த நாள்
18
நவ
2013
10:11
காரைக்குடி: கார்த்திகையை முன்னிட்டு, குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. சண்முகநாதன் ஆறு திருமுகங்களோடும், பன்னிரு திருக்கரங்களோடும், எழுந்தருளியுள்ள சிறப்பு வாய்ந்தது குன்றக்குடி திருத்தலம். மயிலின் வடிவாக காட்சியளிக்கும் இத்திருத்தலத்தில் நேற்று கார்த்திகை தீபமேற்றும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று பகல் 12 மணிக்கு, மலை உச்சியில் இருக்கும், சண்முகநாதப் பெருமான் கார்த்திகை மண்டபத்தில் எழுந்தருளினார். மாலை 5.45 மணிக்கு குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன பூஜை மடத்தில், பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும், 6 மணிக்கு, குன்றக்குடி பொன்னம்பல அடிகள் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது. 6.15 மணிக்கு, கார்த்திகை மடத்தில் சுவாமிக்கு வழிபாடு நடத்தப்பட்டு, 6.30 மணிக்கு, மலைமீது கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. அதை தொடர்ந்து சுவாமி வீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.