பதிவு செய்த நாள்
28
நவ
2013
11:11
சபரிமலை: சபரிமலை பாதுகாப்பு பணியில், இரண்டாம் கட்டமாக, 2,700 போலீசார், நேற்று முதல் பொறுப்பேற்று கொண்டனர். சபரிமலையில், மண்டல மகரவிளக்கு காலம், 60 நாட்கள் நடைபெறும். இந்த கால அளவை ஐந்து கட்டங்களாக பிரித்து, பாதுகாப்பு நடவடிக்கைகாக, 12 நாட்களுக்கு ஒருமுறை போலீசார், புதிதாக வருகின்றனர். கார்த்திகை, 1ம் தேதி முதல், பம்பை மற்றும் சன்னிதானத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்களின் கால அளவு, நேற்று நிறைவு பெற்றதை தொடர்ந்து, அவர்கள் ஊர் திரும்பினர்; புதிதாக வந்தவர்கள், நேற்று பொறுப்பேற்றனர். சபரிமலை சன்னிதானத்தில், 20 டி.எஸ்.பி., 40 இன்ஸ்பெக்டர், 125 எஸ்.ஐ., மற்றும் 1,600 போலீசார் வந்துள்ளனர். இவர்களில் வெடிகுண்டு நிபுணர்கள், உளவுத்துறை என, அனைத்து பிரிவினரும் உள்ளனர். பம்பையில், 10 டி.எஸ்.பி., 20 இன்ஸ்பெக்டர், 40 எஸ்.ஐ., மற்றும் 900 போலீசார் பொறுப்பேற்று உள்ளனர்.