சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகத்தை ஒப்படைக்க வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02டிச 2013 10:12
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகத்தை தில்லை வாழ் அந்தணர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு இந்து ஆலய பாதுகாப்புக் குழு கோரிக்கை வைத்துள்ளது. சிதம்பரம் இந்து ஆலய பாதுகாப்புக் குழு தலைவர் செங்குட்டுவன் அறிக்கை: சுப்ரீம்கோர்ட் சிதம்பரம் நடராஜர் கோவிலை தில்லை வாழ் அந்தணர்கள் வசம் முழுமையாக ஒப்படைப்பது குறித்து தமிழக அரசின் கருத்தினைக் கேட்டு இருப்பதை இந்து ஆலய பாதுகாப்புக் குழு வரவேற்கிறது. தமிழக அரசு 3.12.2013ல் சுப்ரீம்கோர்ட்டில் அளிக்கும் பதில் மனுவில் கோவிலை தில்லை வாழ் அந்தனர்களிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்கிறது. இப்பிரச்னை காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஊர்வலத்தில் தில்லை வாழ் அந்தணர்களுக்கு ஆதரவாக பல ஆயிரக்கனக்கான தமிழ் மக்கள் திரண்டு ஆதரவு அளித்தனர். கோவிலுக்குச் செல்லும் அதிக பக்தர்களின் விருப்பம் தில்லை வாழ் அந்தணர்களிடம் கோவில் நிர்வாகத்தை ஒப்படைப்பதாகும். இக்கோரிக்கையை ஏற்று தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.