உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் பக்தர்களுக்கு இடையூறு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06டிச 2013 05:12
கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் திருப்பணிக்காக கல்மண்டபம் கட்ட கொண்டு வரப்பட்ட ராட்சத கற்கள் நடராஜர் சுவாமி சன்னதி அருகே கிடப்பதால் ஆருத்ரா தரிசன நாளில் பக்தர்களுக்கு பெரும் இடையூறு ஏற்படும் வாய்ப்பு காணப்படுகிறது. உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் ரூ.50 லட்சம்மதிப்பீட்டில் திருப்பணிகள் நடந்து வருகிறது.ஒப்பந்த காலம் முடிவடைந்தும் திருப்பணியில் தொய்வு நிலை தொடர்கிறது. நடராஜர் சுவாமி சன்னதி அருகே திருப்பணிகளுக்கான கற்கள் செதுக்கும் பணி நடந்து வருகிறது.நடப்பாண்டில் ஆருத்ரா தரிசனம் விழா டிச., 9ல் துவங்க உள்ள நிலையில் செதுக்கிய கற்கள் ஆங்காங்கே சிதறி கிடப்பதால் பக்தர்களுக்கு பெரும் இடையூறு ஏற்படும் நிலை உள்ளது.உடனடியாக அகற்றுவதற்கு கோயில் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது குறித்து நிர்வாக அலுவலர் சுவாமிநாதன் கூறியதாவது; ஆருத்ரா தரிசனம் விழாவிற்கு முன்னதாக கற்களை ஒழுங்குபடுத்துமாறு சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது,என்றார்.