பதிவு செய்த நாள்
07
டிச
2013
10:12
திருப்பதி: திருமலையில், சுபதம் வரிசைக்கு செல்ல முடியாமல், பக்தர்கள் அவதிப்படுகின்றனர். திருமலை தெற்கு மாட வீதியை, 1.80 கோடி ரூபாய் செலவில், அகலப்படுத்தும் பணியை, கடந்த வாரம், தேவஸ்தானம் துவக்கியது. அதற்காக, அங்குள்ள ஸஹஸ்ர தீபாலங்கார மண்டபம் அகற்றப்பட்டது. அதன் அருகில், கைக்குழந்தைகளின் பெற்றோர், ஆர்ஜித சேவையில் கலந்து கொள்ள, தரிசனத்திற்காக செல்லும், சுபதம் வரிசை உள்ளது. இதற்கு செல்லும் படிகள், டிச 5 அகற்றப்பட்டதால், பக்தர்கள், அவ்வழியில் செல்ல சிரமப்பட்டனர்; சிலர் வழுக்கி விழுந்தனர். அதைத் தொடர்ந்து, தேவஸ்தான அதிகாரிகள், அந்த வழியை மூடினர். எனவே, பக்தர்கள் நாத நீராஜனம் மண்டபம் வழியாக, சுபதம் வரிசைக்கு செல்ல வேண்டியிருந்தது. இதை அறிந்து கொள்ள, அறிவிப்பு பலகை வைக்கப்படாததால், பக்தர்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.