வள்ளியூர்: வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிவனடியார்கள் சுத்தம் செய்து உழவாரப் பணி மேற்கொண்டனர். வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கார்த்திகை தெப்பத்திருவிழா வரும் 13ம் தேதி நடக்கிறது. இக்கோயில் மற்றும் தெப்பக்குளத்தை சுத்தப்படுத்தி வெள்ளை அடித்து உழவாரப்பணிகள் மேற்கொள்ள கோவில்பட்டி திருச்சிற்றம்பலம் அறக்கட்டளை சிவனடியார்கள் குருபாலசுப்பிரமணியன் தலைமையில் கலந்து கொண்டனர். சுமார் 60க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கோயில் மற்றும் தெப்பக்குளத்தை சுத்தப்படுத்தியும், வெள்ளை அடித்தும் உழவாரப் பணிகள் மேற்கொண்டனர். அவர்களை கோயில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் மற்றும் கோயில் ஊழியர்கள் வரவேற்றனர். ஏற்பாடுகளை வள்ளியூர் திருநாவுக்கரசர் நற்பணி மன்ற ராமகுட்டி செய்திருந்தார்.