பழனி: மலைக்கோயில் விஞ்ச்-க்கு புதிய கயிறு!பழனி: மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல பயன்படும் விஞ்ச்க்கு புதிய வடக்கயிறு இணைக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பழனி மலை இரண்டாம் எண் விஞ்ச் சில தினங்களுக்கு முன் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்பட்டது. விஞ்ச் பெட்டிகளுக்கு புதிய உதிரிப் பாகங்கள் மாற்றப்பட்டு, வர்ணம் பூசப்பட்டு, மோட்டாரையும், விஞ்ச்சையும் இணைக்கும் இரும்பினாலான வடக்கயிறு இணைக்கும் பணி செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது.