வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் பிப்.,9 ல் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18டிச 2013 11:12
தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் வரும் பிப்., 9ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில், உபயதாரர்கள் செலவில் 50 லட்சம் ரூபாய் செலவில் கர்ப்பகிரக விமானம், வடக்கு, தெற்கு, முன் மண்டபங்கள் புதுப்பிக் கப்பட்டுள்ளது. கருங்கல் மண்டபம் மட்டும் "பாலீஸ் போட வேண்டி உள்ளது.அதேபோல் கண்ணீஸ்வரமுடையார் கோயிலில் விநாயகர் , முருகன் சன்னதிகள் கட்டப்பட்டுள்ளன. கர்ப்பகிரக விமானம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.பெரும்பாலான பணிகள் முடிவடைந்துள்ளதால், கும்பாபிஷேம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.ஆன்மிக பிரமுகர்கள், கோயில் நிர்வாகிகள், அறநிலையத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் வரும் 2014ம் ஆண்டு பிப்., 9ம் தேதி கும்பாபிஷேகம் நடத்துவது, என முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் நேற்று தொடங்கப்பட்டன.