பதிவு செய்த நாள்
25
டிச
2013
11:12
தஞ்சாவூர்: தஞ்சை மக்களுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, தனது வாழ்த்து செய்தியை தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தெரிவித்துள்ளார். தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் மேலும் கூறியுள்ளதாவது: உலகில் ஜீவராசிகள் வாழ்வதற்கு ஒளி முக்கியமானது. ஒளி இல்லாவிட்டால் உயிர்கள் வாழ முடியாது. மேலை நாடுகளில் சூரிய வெளிச்சத்தை காண்பது கஷ்டம். குளிர் சீதோஷ்ண காலத்தில் சூரிய ஒளியையே கண்ணால் காண முடியாது. அந்நாட்டினர், சூரியனை கண்டு விட்டால், இன்று நல்ல நாள் என, மகிழ்ச்சி அடைவர். மக்கள் நல்லதை நாடும்போது, இருள் போல தீமை குறுக்கிடுகிறது. மனிதர்கள் பலவீனம், சமுதாய சூழல், ஆகிய காரணங்களால் லஞ்சம், ஊழல், சண்டை சச்சரவுகள் உள்ளிட்டவை ஏற்படுகிறது. இச்சூழலில் தான் மனிதர்கள் வாழ்க்கையில் இருள் சூழ்கிறது. இயேசு பிரான் பிறந்தநாளையே, கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடி வருகிறது. கடவுளாக இருந்து, இயேசு மக்களுக்கு நன்மையை செய்வது போல, நாமும் சமூகத்திலுள்ள தீமை என்னும் இருளை அகற்றி நன்மை என்னும் ஒளியை ஏற்ற பாடுபட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.