பதிவு செய்த நாள்
30
டிச
2013
11:12
சேலம்: சேலத்தில், உலக நன்மைக்காக, 24 யாக குண்டம் அமைத்து, இமயமலையில் இருந்து கொண்டு வரப்பட்ட, 108 மூலிகைகளால், காயத்ரி மகா யக்ஞம் நடத்தப்பட்டது. சேலம் குகை காளியம்மன், மாரியம்மன் கோவில் கல்யாண மண்டபத்தில், 24 யாக குண்டம் அமைத்து, ஹரித்துவார் காயத்ரி தீர்த், சாந்திகுஞ்சு ஆஸ்ரம அன்பர்களால், இமயமலையில் இருந்து எடுத்து வரப்பட்ட, 108 மூலிகைகளால், காயத்ரி மகா யக்ஞம் நடத்தப்பட்டது. உலக நன்மைக்காக நடத்தப்பட்ட இந்த சிறப்பு ஹோமத்தில், திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.