பதிவு செய்த நாள்
30
டிச
2013
11:12
சேலம்: சேலம், ஐயப்பன் பஜனை மண்டலியில், நேற்று நடந்த ராதா கல்யாணத்தில், திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். சேலம், டவுன் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள ஐயப்பன் பஜனை மண்டலி, தர்ம சாஸ்தா ஆஸ்ரமத்தில், மகர பூஜை விழா நடந்து வருகிறது. நேற்று காலையில் உஞ்சவ்ருத்தி, ராதா கல்யாண வைபவம் நடந்தது. தொடர்ந்து ஐயப்ப ஸ்வாமிக்கு சிறப்பு நெய் அபிஷேகம் நடந்தது. இதில், திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மாலையில் புஷ்பாஞ்சலி, படி பூஜை ஆகியன நடந்தது. ஜனவரி, 1ம் தேதி காலையில் சிறப்பு அபிஷேகம், மாலையில் படி பூஜை ஆகியன நடக்கிறது. ஜனவரி, 14ம் தேதி வரை, தினந்தோறும் சிறப்பு பூஜை, படி பூஜை ஆகியன நடக்கிறது.