ஒப்பற்ற மங்கலப் பொருளாகத் திகழும் வில்வம், மருத்துவ மகத்துவமும் நிறைந்தது. சிவராத்திரி காலத்தில், சிவபூஜைகளில் அர்ச்சனைப் பொருளாகப் பயன்படுவது வில்வமே! சிவனாருக்கு விருப்பமான வில்வ இலைகளில் லட்சுமி உறைந்திருக்கிறாள். எனவே சிவனாருக்கே உரிய திருவாதிரை நட்சத்திர நாளில், லட்சுமியுடன் இருக்கும் வேங்கடாஜலபதிக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்யப்படுகிறது.