அன்னை ஆதிபராசக்தியே பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறாள். இவளை என்னென்ன பெயர்களால் வழிபட வேண்டும் என்பதற்கு ஸ்லோகங்கள் உள்ளன. இந்தப் பெயர்களைச் சொல்லி வழிபட்டால் கிடைக்கும் பலன்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.
ஜெய் காளி - எதிரிகளின் ஆதிக்கம் ஒழியும் ஜெய் சண்டிகாதேவி - செல்வம் சேரும் ஜெய் சாம்பவி - அரசு சார்ந்த செயல்பாடுகளில் வெற்றி பெறும். ஜெய் துர்க்கா - ஏழ்மை அகலும், துன்பம் விலகும், போரில் வெற்றி கிடைக்கும், மறுபிறவியிலும் நல்லதே நடக்கும். ஜெய் சுபத்ரா - விருப்பங்கள் நிறைவேறும் ஜெய் ரோகிணி - நோய் தீரும்.