இக்காலத்தில், பெரும்பாலும் தனிக் குடித்தனம் இருப்பவர்களே அதிகம். கணவர் வேலைக்குப் போய்விட்டால், வீட்டில் இருக்கும் மனைவிக்கு பயமாக இருக்கலாம். பெண்கள் வேலைக்குப் போகிறவர்களாக இருந்தால், வெளியாட்களால் பிரச்னை ஏற்படலாம். இப்படிப்பட்டவர்கள் நவதுர்க்கைகளின் பெயரைச் சொன்னாலே போதும். இந்த துதிக்கு சக்தி காப்பு என்று பெயர். மார்க்கண்டேய முனிவருக்கு பிரம்மா உபதேசித்த மந்திரம் இது. சைலபுத்ரீ, பிரும்மசாரிணீ, சந்திரகண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயனீ, காளராத்ரீ, மகா கவுரி, சித்தி தாத்ரீ என்ற நவசக்திகளே! உங்கள் திருப்பாதங்களில் சரணடைகிறேன், என்பதே அந்த மந்திரம். இந்த மந்திரத்தைச் சொல்பவர்கள் தீயில் சிக்கினாலும் தப்பித்து விடுவர். பகைவர்களின் பிடியில் இருந்து விடுபடுவர். இருளான பகுதிகளுக்குச் செல்லும் போது பயம் இருக்காது. எதிரிகள் போர் தொடுத்தால் இந்த மந்திரம் நமக்கு வெற்றியைப் பெற்றுத் தரும். செல்வ வளமும் ஏற்படும்.