நாகூர் ஆண்டவர் தர்கா பகுதிசுற்றுலா தலமாக்க வேண்டும்:ஜமாத் தலைவர்கள் வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜன 2014 10:01
என்மனங்கொண்டான்:என்மனங்கொண்டான் ஊராட்சியில் உள்ள நாகூர் ஆண்டவர் தர்கா பகுதியை சுற்றுலா தலமாக்க வேண்டும். அடிப்படை வசதிகள் சில நிறைவேற்ற வேண்டும் என, ஜமாத் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.என்மனங்கொண்டான் ஜமாத் தலைவர் அமீர் ஹம்சா: நாகூர் ஆண்டவர் தர்கா ரோடு பாதி வரை அமைக்கப்பட்டுள்ளது. மீதியையும் விரைவில் அமைக்க வேண்டும். இங்கு தெருவிளக்குகள் கூடுதலாக அமைக்க வேண்டும். தெருவிளக்குகளை சிலர் உடைத்து விடுகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தர்கா பகுதியை சுற்றுலா தலமாக்க வேண்டும். புதுநகரம் ஜமாத் தலைவர் சீனி சிராஜ்தீன்: புதுநகரம் பள்ளிவாசல் ரோடு மோசமாக இருக்கிறது. இங்கு ரோடு அமைக்க வேண்டும். கொசுத்தொல்லை அதிகரித்து பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கூடுதல் ரேஷன் கடை அமைக்க வேண்டும்.ஊராட்சி தலைவர் காளீஸ்வரி: 70 தெருவிளக்குகள் விரைவில் ஊராட்சி நிதியில் அமைக்கப்படும். பஸ் ஸ்டாண்ட், கூடுதல் ரேஷன் கடை அமைக்க மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தி வருகிறோம். இதுதவிர அடிப்படை பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்து வருகிறோம். இதற்காக சொந்த பணத்தையும் செலவழித்து வருகிறேன்.