பதிவு செய்த நாள்
08
ஜன
2014
11:01
மணப்பாறை: மணப்பாறை அருகேயுள்ள வீரப்பூரில் திருச்சி புறநகர் மாவட்ட அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., இளைஞரணி சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க பிரச்சாரம் மற்றும் சர்வசமய ஆலயங்களில் கூட்டு பிரார்த்தனை நடந்தது.வீரப்பூர் பெரியக்காண்டியம்மன் கோவிலில் கூட்டுப்பிரார்த்தனைக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் சண்முகபிரபாகரன் தலைமை வகித்தார். நகராட்சி துணைத்தலைவர் இளங்கோ, வையம்பட்டி யூனியன் துணைச்சேர்மன் முத்துச்சாமி முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் சேது வரவேற்றார்.கதர் மற்றும் கிராமத்தொழில்த்துறை அமைச்சர் பூனாட்சி, திருச்சி புறநகர் மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ரத்தினவேல், மணப்பாறை எம்.எல்.ஏ., சந்திரசேகர் ஆகியோர் மக்களிடம் தமிழக அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரம் வழங்கினர்.முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சின்னச்சாமி, செல்லையா, பொதுக்குழு உறுப்பினர் இஸ்மாயில், மாவட்ட பொருளாளர் செல்வராஜ், மணப்பாறை ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், வையம்பட்டி யூனியன் சேர்மன் கல்பனா, பஞ்சாயத்து செயலாளர்கள் ரமேஷ், விஜயன், சேட்டு சண்முகவேல், கூட்டுறவு சங்க தலைவர் வெள்ளைச்சாமி பங்கேற்றனர்.வையம்பட்டி ஒன்றிய செயலாளர் செல்வம் நன்றி கூறினார்.