உவரி சுயம்புலிங்கசுவாமி கோவிலில் தை திருவிழா கொடிஏற்றத்துடன் துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜன 2014 01:01
உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைத்திருவிழா நேற்று கொடிஏற்றத்துடன் தொடங்கியது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மங்கள வாத்தியம் முழங்க ஊர்வலமாக கொடிபட்டம் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு அதிகாலை 6 மணிக்கு மேள தாளம் முழங்க கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் தைத்திருவிழா கொடி ஏற்றம் சிறப்பாக நடைபெற்றது.