பதிவு செய்த நாள்
10
ஜன
2014
03:01
திருவாரூர்: ஆசியாக்கண்டத்திலே மிகப்பெரியத் தேர் என்ற பெருமைக்குரிய திருவா ரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித் தேர் செப்பணிடும் பணிகள் கடந்த 2 ஆண் டுகளாக துரிதமாக நடந்து வருகிறது. இப்பணிகளை விரைந்து முடித்து தேரோட்டத்தை துவக்க வேண்டும் என பொதுமக்கள் ஆர்வத்தில் உள்ளனர். தமிழகத்தில் உள்ள சைவ தலங்களில் பழமையும், பெருமையும் வாய்ந்தது திருவாரூர் தியாகராஜர் கோவில். இக்கோவிலில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும், அப்பர், சுந்தரர்,சம்மந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர õல் பாடல் பெற்ற பெருமைக்குரியது. சைவ சயமத்தின் தலைமையிடமாக திகழும் இக்கோவில் 9 ராஜகோபு ரங்க ள், 80 விமானங்கள், 12 பெரியமதில்கள், 13 மண்டபங்கள், 15 தீர்த்த க்கி ணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரியபிரகாரங்கள்,100 க்கும் மேற்பட்ட சன் னதிகளுடன் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இக்கோவில் தேர் ஆசி யாக்கண்டத்திலே மிகப்பெரியது என்ற பெரு மைக்குரியது. இங்கு ஆண்டுதோறும் பங்குனிமாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித் தேரோட்டம் நடக்கும் போது ஆயிரக்கணக்கானோர் கூடிநின்று ஆரூரா...., தியாகேசா...., என்று பக்தி முழக் கமிடுவர்.
தேரின் உயரம்: தேர்களில் பெரும்பாலும் விமானங்கள் அறுபட்டை அல்லது எண் பட்டை அல்லது வட்ட வடிவிலே இருக்கும். ஆனால் இங்குள்ள தேரின் பீடம் முதல் விமானம் வரை பக்கத்துக்கு 5 பட்டைகள் வீதம் 20 பட்டைகளைக் கொண்டுள்ளது. அலங்கரிக்கப்படாத ஆழித்தேரின் உயரம் 30 அடி, விமானம் வரை தேர், சேலை களால் அலங்கரிக்கப்படும் பகுதி 48 அடி, விமானம் 12 அடி, தேர் கலசம் 6 அடி, என மொத்தம் 96 அடி உயரத்தில் மிகப்பிரமாண்டமாக காட்சியளிக்கும்.
தேரின் எடை: தேரின் இரும்பு அச்சு மற்றும் நான்கு இரும்பு கரங்கள் ஹைட்ராலிக் பிரேக் ஆகிய வற்றின் எடை 220 டன் ஆகும். இதன் மீது 5 டன் எடையுள்ள பஞ்சனைகள், 50 டன் எடையுள்ள கயிறு, 500 கிலோ எடை யுள்ள அலங்காரத்துணிகள் ஆகியவற்றைப் பயன் படுத்தி தேரை அலங்கரிப்பர். இது தவிர தேரின் முன் புறம் கட்டப்படும் 4 குதிரைகள், யாளி, பிர்மா ஆகிய பொம்மைகள் 4 புறமும் கட்ட ப்படும் அலங்காரத் தட்டிகள் ஆகியவற்றின் எடை 5 டன், இவைகளை சேர்த்து அங்கரிக்கப்பட்ட தேரின் மெத்த எடை 300 டன். தேரை இழுக்க 4 வடங்கள் பொருத்தப்படும். தேரின் பின் பக்கமிருந்து தள்ள 2 புல்டோ சர்கள், 4 வீதிகளிலும் தேரை திருப்பவும், செலுத்தவும், ஜாக்கிகள், இரும்புத் தகடுகள் பயன் படுத் தப்படும். நான்கு வீதிகளிலும் தேர் நின்று அசைந்தாடி திரும்பும் அழகை காண இரு கண்கள் போதாது என பக்தர்கள் உற்சாகத்தில் காத்திருப்பர்.
நீண்ட இடை வேளை: இத்தகைய சிறப்பு மிகுந்த தேரோட்டம் 22 ஆண் டுகள் ஓடாமல் இருந்தது. 1967ல் அப்போதைய முதல்வர் கருணா நிதியால் மீண்டும் தேரோட்டம் துவங்கியது. காலப்போக்கில் இந்த விழா பங்குனி ஆயில்ய நட்சத்திரத்தின் போது பள்ளிகளில் தேர்வும், வயலில் உளுந்து பயிர் அருவடை சீசன் என்பதால் அப்போது நடத்தாமல், பொது மக்கள், மாண வர்கள் மற்றும் தொழிலா ளர்களுக்கு ஏற்ப ஆண்டில் எதாவது ஒரு மாதத்தில் நடத்தப்பட்டது.
போட்டித் தேரோட்டம்: இந்த முறையைமாற்றி ஆயில்ய நட்சத்திரத்தில் நடத்த வேண்டும் என பா.ஜ., இந்து முன்னணியினர்களின் பல்வேறுப் போராட்டத்துடன், ஆயில்ய நட்சத் திரத்தில் போட்டி தேரோட்டம் நடத்தி எதிர்ப்பை வெளிபடுத்தினர்.
கடையாசியாக தேரோட்டம்: இந்நிலையில் தேர் மிகவும் வலுவிழந்து காணப்பட்டது. இவற்றை சரி செய்ய நடவடக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையிலும், கடந்த 2010 ஜூலை 16ம்தேதி கடைசியாக தேரோட்டம் நடந்தது. அப்போது பக்தர்கள் வசதிக்கு 4 வீதிகளும் 5.76 கோடி ரூபாய் செலவில் சிமெண்ட் சாலை வசதி அமைக்கப்பட்டது. தேரோட்டம் விறுவிறுப்பாக நடந்து ஒரே நாளில் தேர் உரிய இடத்திற்கு சென்றடைந்தது.
தேர் புரணமைப்பு: வலுவிழந்த தேரை சரி செய்ய கடந்த ஆட்சியில் 2 கோடிரூபாய் நிதி ஒதுக்கப் பட்டது. தேரின்வடிவமைப்பு மாறாமல் இருக்க தலை சிறந்த சிற்பிகளை கொண்டு தேர் திருப்பணிகள் துவங்கி அரிய வகை மரங்கள் பல்வேறுப்பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டு தேர் வடிவ மைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
கோவில் நிர்வாகம்: புதிய தேர் செய்ய தஞ்சை சுற்றுப்பகுதியில் வனத் துறை அனுமதிப் பெற்று தேக்கு மரங்கள் விலைக்கு வாங்கி வந்து தற்போது பூதபார், சிறு உறு தலம், பெரியஉறுதலம்.நடகாசனம், பத்மாசனம் உள்ளி ட்ட பணிகள் 75 சதவீ தம் முடிந்து அடுக்கிவைக்கப்பட்டுள்ளது. மேலும் தேவாசனம், சிம்மாசனம் உள்ளிட்ட சிறு சிறுப் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை விரைவில் முடித்து,வெள்ளோட்டம் விடப்படும் என்றனர்.
பொதுமக்கள் கருத்து: வரலாற்றுசிறப்பு இக்கோவிலில், கோவில் திருப் பணிகள் துவக்கப்பட்டு ஆரம்ப கட்ட பணிகள் முடிக்க வில்லை. ஆழித்தேர் பணிகள் முடிந்து ஜனவரியில் வெள்ளோட்டம் விடப்படும் என கோவில் நிர்வாகம் கூறிவது எந்தளவிற்கு சாத்தியம் என தெரிய வில்லை. இதுவரை எந்த பணிகள் முடியவில்லை இதனால் பக்தர்கள் வேதனை அடைந் துள்ள னர். விரைவில் பணிகளை முடிக்க அரசும், கோவில் நிர்வாக மும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.