பதிவு செய்த நாள்
16
ஜன
2014
10:01
தமிழகத்தில் உள்ள, முருகன், சிவன், பெருமாள், அம்மன் கோவில்களில், நேற்று தெப்ப உற்சவ திருவிழா நடந்தது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். "பிறவி என்னும் பெருங்கடலில் விழுந்தவர்களை, தன் கருணை என்னும் தெப்பத்தில் ஏற்றி, முக்தி எனும் கரையில் சேர்ப்பவன் இறைவன் என்பதை உணர்த்துவதற்காகவே, தெப்பத் திருவிழா நடத்தப்படுகிறது என்பது ஐதீகம்.பாரம் குறைவான பொருட்களால் கட்டினால், நீரில் மிதப்பதற்கு எளிதாக இருக்கும் என்பதால், எடை குறைந்த பொருட்களால், தெப்பம் அமைக்கப்படும்.நேற்று, சிவன், முருகன் கோவில் களில், தெப்பத் திருவிழா துவங்கியது. இன்னும் இரண்டு நாட்கள் நடக்கும்.