பதிவு செய்த நாள்
17
ஜன
2014
12:01
பொதட்டூர்பேட்டை: ஆறுமுகசுவாமி கோவிலில், நேற்று பார்வேட்டை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், மலை முழுவதும் குவிந்திருந்தனர்.பொதட்டூர்பேட்டை ஆறுமுகசுவாமி மலைக்கோவிலில், காணும் பொங்கலை ஒட்டி, சிறப்பு உற்சவம் நடந்தது. இதையடுத்து, நேற்று மாலை, மலை முழுவதும், ஆயிரக்கணக்கான கிராம மக்கள் குவிந்திருந்தனர். பொங்கல் விடுமுறையில், சொந்த கிராமத்திற்கு வந்திருந்தவர்கள் மலைக்கோவிலில் நேற்றைய மாலை பொழுதை கழித்தனர்.இதையடுத்து, மலை முழுவதும் துரித உணவு கடைகள் ற்படுத்தப்பட்டிருந்தன.மாலை 6:00 மணியளவில், அடிவாரத்தில் இருந்து ஆறுமுகசுவாமி, அகத்தீஸ்வரர், விநாயகர் உற்சவ மூர்த்திகள், மேளதாளங்கள் முழங்க, வாணவேடிக்கையுடன் பார்வேட்டைக்கு புறப்பட்டனர்.