பாகனேரி: நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் பாரம்பரியம்,கலாசாரம்,ஒற்றுமையை வெளிப்படுத்தும் "செவ்வாய் பொங்கல் பாகனேரி, நாட்டரசன் கோட்டையில் வரும் 21 ந்தேதி நடக்கிறது."தை மாதத்தில் மாட்டுப்பொங்கலுக்கு அடுத்து வரும் செவ்வாய்கிழமையில் இந்த பொங்கல் விழா நடைபெறுவது காலம் காலமாக உள்ளது. நாட்டரசன்கோட்டையில் கண்ணாத்தாள் கோவில் எதிர்புறத்திலும், பாகனேரியில் புல்வநாயகியம்மன்கோவில் எதிரிலும் பொங்கல் வைக்கப்படுகிறது. திருமணமான ஒவ்வொரு ஆணுக்கும் ஒரு புள்ளி என்ற கணக்கீடு செய்யப்பட்டு அடுப்பு ஒதுக்கப்படும்.புள்ளிகளுக்கு ஏற்ற வகையில் சீட்டுகள் எழுதப்பட்டு வெள்ளிக்குடத்தில் குலுக்கப்பட்டு வரிசையாக சீட்டுக்கள் எடுக்கப்பட்டு அடுப்பு அமைக்கப்படும் . இந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் இந்த பொங்கல் விழாவில் கட்டாயம் கலந்து கொள்வர்.