பதிவு செய்த நாள்
22
ஜன
2014
11:01
புதுடில்லி: இந்த ஆண்டுக்கான, அமர்நாத் புனித யாத்திரை, ஜூன் 28ம் தேதி துவங்கி, ஆக., 10ம் தேதி முடிவடையும் என, அமர்நாத் கோவில் வாரியம் அறிவித்துள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், அமர்நாத் பனி லிங்கத்தை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து செல்வர். ஒவ்வொரு ஆண்டும், ஜூன், 28ம் தேதி துவங்கி, ஆக., 21ம் தேதி வரை, 55 நாட்கள், இந்த புனித யாத்திரை நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு, பக்தர்களின் பாதுகாப்பு கருதி, 44 நாட்களாக குறைக்கப்பட்டு, ஆக., 10ம் தேதியுடன் நிறைவு பெறும் என, கோவில் வாரிய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.