பதிவு செய்த நாள்
27
ஜன
2014
11:01
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ., நகர் ராகவேந்திரர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. திருக்கோவிலூர், என்.ஜி.ஜி.ஓ., நகரில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீராகவேந்திரர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று காலை நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு புண்யாக வாசனம், ம்ருத்சங்க்ரணம், ஜலாஹரணம், கவுதபந்தனம், வாஸ்து பூஜை, கலசஸ்தாபனம், நவக்ரக ஹோமம், வாஸ்து ஹோமம், வேதபாராயணம் நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு புனர்பூஜை, ஹோமங்கள் பலிதானம், பூர்ணாகுதி, நேத்ரோன் மீலனம், ப்ராண பிரத்திஷ்டாபனம், 9:00 மணிக்குமேல் 10.30 மணிக்குள் ஆஞ்சநேயர், ராகவேந்திரர் சுவாமிகளுக்கு ரங்காச்சாரிய குத்தல் சுவாமிகள் தலைமையிலான வேதவிற்பன்னர்கள் வேதமந்திரம் முழங்க புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தினர். தொழிலதிபர்கள் டி.கே.டி.முரளி, கோபி, பேரூராட்சி மன்ற தலைவர் தேவிமுருகன், தியாகராஜன், சக்தி, பேரூராட்சி துணைத்தலைவர் குணா, கவுன்சிலர்கள் சுப்பு, சம்பத் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.