புதுச்சேரி: புதுச்சேரி புது பஸ் நிலை யம் பின்புறம் உள்ள வெள்ளந்தாங்கி ஐயனாரப்பன் கோவிலில், உலக நன்மை, மக்கள் நலம் பெற வேண்டி 108 கங்கை தீபம் ஏற்றப்பட்டு, கலச பூஜை நடந்தது. இதில், 24 கன்னியர்கள், 27 சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டு, 108 கங்கை தீபம் ஏற்றி, காயத்திரி மந்திரங்கள் வாசித்து கலசங்களுக்கு பூஜை செய்தனர்.நிகழ்ச்சியில், சுப்ரமணிய சதாசிவ சுவாமிகள், காவலர் பொதுநல இயக்க பொதுச் செயலாளர் கணேசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.