சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் தைத் திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான அய்யாவழி பக்தர்கள் பங்கேற்றனர். விழா கடந்த 17-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திங்கள்கிழமை தலைமைப் பதியில் இருந்து பல்லக்கு வாகனத்தில் வந்த அய்யா, பிற்பகல் 12 மணிக்கு பஞ்சவர்ண தேருக்கு எழுந்தருளி தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.