திருச்செந்தூர்: சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா பிப்ரவரி 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு, அன்று அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து காலை 5.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் திருக்கோயில் செப்புக் கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்படுகிறது.