குன்றக்குடி: ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த குன்றக்குடி சண்முநாதப் பெருமான் கோயிலில் ரூ.2 கோடி செலவில் திருப்பணிகள் நிறைவுற்று வரும் மார்ச் 19ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளதாக குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத் தலைவர் பொன்னம்பல அடிகளார் தெரிவித்தார். குன்றக்குடியில்குடமுழுக்கு நடைபெறுவதை யொட்டி, திங்கள்கிழமை பாலாலய பூஜைகள் நடைபெற்றன. நடைபெற்ற பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பங்குனி 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்று பங்குனி 5-ம் தேதி ( மார்ச் 19) புதன்கிழமை குடமுழுக்கு விழா நடைபெறுகிறது.