பதிவு செய்த நாள்
29
ஜன
2014
10:01
சென்னை: பிப்ரவரியில் மட்டும் 9 முகூர்த்த நாட்கள், மார்ச், ஏப்ரலில் தலா ஆறு முகூர்த்த நாட்கள் என மூன்று மாதங்களில் 21 முகூர்த்தங்கள் தொடர்ந்து வருவதால், திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் தமிழகமெங்கும் களை கட்டியுள்ளது.2014ம் ஆண்டில், பிப்ரவரி மாதத்தில் தான், அதிக பட்சமாக 9 முகூர்த்த நாட்கள் வருகிறது. இதனால், நகை, ஜவுளி, பாத்திரம், பர்னிச்சர், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இதர பொருட்கள் வாங்கும் கடைகளில் விற்பனை அதிகரித்துள்ளது. திருமண மண்டபங்கள் வேகமாக புக் செய்யப்பட்டு வருகின்றன. கேட்டரிங் தொழிலில் உள்ளவர்களுக்கும் அதிக ஆர்டர்கள் வருகின்றன. மொத்தத்தில், கல்யாணக்களை கட்டியுள்ளதால், வீடுகளில் மகிழ்ச்சி வெள்ளம் பெருகியுள்ளது.