ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜன 2014 12:01
தியாகதுருகம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது. ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழாவை முன்னிட்டு மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு சிறப்பு தேனபிஷேகம் நடந்தது. பலிபீடம் அருகில் உள்ள நந்திக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. உற்சவர் சிலை அலங்கரித்து கோவிலை சுற்றி தாலாட்டியபடி பக்தர்கள் வலம் வந்தனர்.மகாதீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பிரதோஷ முறைப்படி வழிபட்டனர். குருக்கள் நாகராஜ், சோமு ஆகியோர் பூஜைகளை செய்தனர். இதேபோல் புக்குளம் கைலாச நாதர் கோவிலில் நடந்த பிரதோஷ பூஜையில் நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.ஏராளமான பெண்கள் விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினர்.