விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பானாம்பட்டு ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் முதலாம் ஆண்டு நிறைவு விழா நடந்தது. விழாவை யொட்டி நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு அம்மனுக்கு சம்வாத்ரா ஹோமம், 10:30க்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து பகல் 12:00 மணிக்கு மகா தீபாராதனை, இரவு 7:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் பலர் தரிசனம் செய்தனர்.