ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் நித்தீஸ்வரர் சுவாமி கோவிலில் 108 விளக்கு பூஜை நடந்தது. காஞ்சி சங்கராச்சாரியார் 80வது பிறந்த நாள் விழா, சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 47வது ஜெயந்தி விழா, ஜனகல்யாண் 27ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி விளக்கு பூஜை விழா நடந்தது. விழாவையொட்டி நித்தீஸ்வர சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அர்ச்சனைகள் நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் ரவிசுந்தர் குருக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் செய்திருந்தனர்.