கம்மாபுரம்: கம்மாபுரம் அடுத்த முதனை தீப்பாய்ந்த நாச்சியார் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.அதையொட்டி காலை 6:00 மணிக்கு கோ.பூஜை, விசேஷ ஹோமம், 9:00 மணிக்கு லலிதா சகஸ்ரநாம பாராயணம், 10:30 மணிக்கு கடம்புறப்பாடு நிகழ்ச்சிகள் நடந்தன. பகல் 11:15 மணியளவில் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம், தொடர்ந்து மூலவர் தீப்பாய்ந்த அம்மனுக்கு மகா அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.