பதிவு செய்த நாள்
05
பிப்
2014
11:02
சென்னை: பொதுத்தேர்வில், மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற, சென்னை, அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழு, வரும் 16ம் தேதி, சிறப்பு வழிபாடு நடத்துகிறது. சைதாப்பேட்டையில் உள்ள, காரணீஸ்வரர் கோவிலில், பிப்., 16ம் தேதி, காலை 9:00 மணிக்கு, இந்த சிறப்பு வழிபாடு நடக்க உள்ளது. இதில், பங்கேற்க விரும்பும், பிளஸ் 2, 10ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர், தங்கள் பள்ளி அடையாள அட்டை நகலுடன், பிப்., 8ம் தேதி, காலை 9:00 மணி முதல், மதியம் 12:00 மணிக்குள், வழிபாடு நடக்க உள்ள கோவிலுக்கு வந்து, தங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும்.முன்பதிவு செய்யாதவர்கள், வழிபாட்டில் பங்கேற்க முடியாது. அனுமதி இலவசம்.