பதிவு செய்த நாள்
13
பிப்
2014
10:02
புதுச்சேரி: பெரிய காலாப்பட்டு பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பெரிய காலாப்பட்டு மாத்தூர் சாலையில் பாலமுருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் ராஜகோபுரம் மற்றும் கோவில் வளாகத்தில் விநாயகர், விஸ்வநாதர், விசாலாட்சி, தட்சிணாமூர்த்தி, வீர அஞ்சிநேயர், வெங்கடாசலபதி, துர்க்கையம்மன், மயிலம்மன், சூரியன் சந்திரன், பைரவர், இடும்பன் சன்னதிகள் அமைக்கப்பட்டு, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.அதையொட்டி, கடந்த 10ம் தேதி கணபதி பூஜைகள் துவங்கியது. நேற்று காலை 6.30 மணிக்கு நான்காம் கால பூஜையும், 9:15 மணிக்கு தீபாரதனை, 9:30 மணிக்கு கடம் புறப்பாடும், நடந்தது.10:15 மணிக்கு மூலவர் பாலமுருகன், ராஜகோபுரம் மற்றும் பரிவார சுவாமி சன்னதிகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது.முன்னதாக காஞ்சி விஜயேந்திரர், மூலவர் பீடத்தில் சொர்ண இயந்திரத்தை வைத்து அருளாசி வழங்கினார்.தொடர்ந்து சுவாமிகளுக்கு மகா அபி?ஷகம் நடந்தது. இரவு சுவாமி வீதியுலா நடந்தது.பெரிய காலாப்பட்டு மற்றும் சுற்றுப்புற 40 கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணகான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழாவில், முதல்வர் ரங்கசாமி, முன்னாள் அமைச்சர் ஷாஜகான், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., பா.ம.க., வேட்பாளர் அனந்தராமன், சாசன் நிறுவன நிர்வாக இயக்குனர் அபயகுமார், இயக்குனர் மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை பெரிய காலாப்பட்டு பாலமுருகன் கோவில் நிர்வாகிகள்,கிராம மக்கள் மற்றும் சாசன் நிறுவனத்தினர் இணைந்து செய்திருந்தனர்.