பதிவு செய்த நாள்
14
பிப்
2014
12:02
சென்னை: தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரத்தில், நாதஜோதி முத்து சுவாமி தீட்சிதரின், 240வது ஜெயந்தி விழா நடக்க உள்ளது. வரும், ஏப்ரல் 3, 4ம் தேதிகளில் நடக்கும் இந்த விழாவில், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர், கிருஷ்ணமூர்த்தி, மும்பை பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி துணைத் தலைவர், கணேஷ் குமார் உட்பட, பலர் கலந்து கொள்கின்றனர். விழாவில், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழகம், புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்று, சங்கீத அஞ்சலி செலுத்துகின்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு, ஸ்ரீ தீட்சிதர் ரசிகர்கள் கமிட்டியின் காரியதரிசி, ராஜகோபால் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் விவரங்களுக்கு, 98948 97022 என்ற தொலைபேசி எண்ணில், தொடர்பு கொள்ளலாம்.