விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மாத திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. ஒன்பது நாட்கள் நைடைபெறும் திருவிழாவி்ல் ஆறாவது நாளான இன்று விருத்தாம்பிகை பாலாம்பிகை உடனுறை விருத்தகிரிஸ்வரர் தேரோட்டம் நடைபெற்றது. முதல் தேராக கணேசர் தேரும் இரண்டாவதாக சுப்பிரமணியர் தேரும் முடிவில் விருத்தகிரீஸ்வரர் தேரும் வீதி வலம் வந்தது.