மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் வெள்ளந்தாங்கி அய்யனார் கோயில் உள்ளது. ஒருமுறை காவிரி வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மூட்டை ஒன்று கூரைநாட்டுப் பகுதியில் கரை ஒதுங்கியதாம். அதை அப்பகுதி மக்கள் பிரித்துப் பார்த்தபோது உள்ளே அய்யனார் சிலை இருக்க, அதை எடுத்து கோயில் கட்டி வழிபட ஆரம்பித்தனர். வெள்ளத்தில் அடித்து வரப்பட்டாலும், சிலைக்கு எந்தப் பாதிப்பும் இல்லாததால், இவரை வெள்ளந்தாங்கி அய்யனார் என்றே மக்கள் அழைத்து வருகின்றனர்.