நாம் மற்றவர்கள் மீது கருணை காட்டுவதுதான், நாம் இறைவனின் கருணையைப் பெறுவதற்குரிய வழியாகும். நாம் பிறரிடம் அன்புகாட்டுவதுதான், நாம் இறைவனின் அன்பைப் பெறுவதற்குரிய வழியாகும். நாம் பிறரிடம் கருணையுடன் நடந்து கொண்டால்தான் இறைவன் நம்மீது கருணையுடன் நடந்துகொள்வான். நாம் உலகிலுள்ள ஜீவர்களுக்குத் தயை புரிவதுதான் நாம் இறைவனின் தயையைப் பெறுவதற்குரிய வழியாகும்.