பள்ளூர்: வாராஹியம்மன் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளூரில் உள்ள அரசாலையம்மன் என்கிற வாராஹியம்மன் கோவிலில் புதிய மரத்தேர் செய்ய இந்துசமய அறநிலையத் துறை உத்தரவு பெறப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கின. ரூ. 38.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய மரத்தேர் செய்யும் பணிகள் முடிவடைந்தன. தேர் நிர்மாணப் பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று வெள்ளோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.