புவனகிரி : புவனகிரி பகுதியில் இன்று ஒரே நாளில் இரண்டு இடங்களில் மயானக் கொள்ளை நடக்கிறது.அதனையொட்டி புவனகிரி அங்காளம்மன் மற்றும் பூங்காவனத்தம்மன் கோவில்களில் நேற்று தனித்தனியே காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தன. தொடர்ந்து இரண்டு சுவாமிகளும் மேல்புவனகிரி, கீழ்புவனகிரி மயானங்களுக்குச் சென்று சிறப்பு பூஜை செய்யப்பட்டு நள்ளிரவு வீதியுலா நடந்தது.இரண்டாம் நாளான இன்று மதியம் சுவாமி அலங்கரிக்கப்பட்டு குறத்தி வேடமணிந்து குறி சொல்லும் காட்சியும், மயான பகுதிகளுக்குச் சென்று சூறையிடும் காட்சியும், சுவாமிகள் வீதியுலாவும் நடக்கிறது.