பதிவு செய்த நாள்
28
பிப்
2014
11:02
சிவகங்கை: சிவகங்கையில், மாசி திருவிழாவை முன்னிட்டு, திரவுபதி அம்மன், காமாட்சி அம்மன் கோயிலில், பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்தி செலுத்தினர். மாசி திருவிழாவை முன்னிட்டு, இவ்விரு கோயில்களில் நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 7 மணி முதல் 10 மணி வரை, பக்தர்கள் நகர் தெப்பக்குளத்தில் இருந்து, அரண்மனை வாசல், நேருபஜார், மேற்கு ரதவீதி வழியாக கோவிலுக்கு பால்குடம் எடுத்து நேர்த்தி செலுத்தினர். இரவு, அம்மன் கரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள், சாமி தரிசனம் செய்தனர். விழாக்குழுவினர் ஏற்பாடுகளை செய்தனர்.