காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் பங்குனி உத்திர விழா துவங்கியது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரால் பாடல் பெற்ற தலமாகவும் விளங்குவது காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி திருக்கோவிலாகும். இக்கோவிலில் ஏகலவார்குழலி சமேத ஏகாம்பரேஸ்வரர் பவழக்கால் சப்பரத்தில் கோயில் உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவில் சுவாமி சிம்ம வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும் எழுந்தருளி ராஜவீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வரும் 12--ம் தேதி வெள்ளித் தேர் உற்சவமும், மறுநாள் காலை தேரோட்டமும் நடைபெறும். 17--ம் தேதி அதிகாலை திருக்கல்யாண வைபவம் நடைபெறும். 20-ம் தேதி திருமுறை உற்சவத்துடன் விழா நிறைவடையும்.