குமாரபாளையம் நாமக்கல் ,குமாரபாளையம் காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி வண்டி வேடிக்கை நடைபெற்றது. இதில் மின் அலங்காரம் செய்யப்பட்ட ரதத்தில் முருகன், ராமர் சிவ வழிபாடு, கேரள கதகளி நடனம், பரமபத நாராயணன், காளி நடனம், முப்பெருந்தேவியர் உள்பட பல்வேறு வேடங்களில் கலைக் குழுவினர்கள் ஊர்வலமாக வந்தனர் முன்னதாக நேற்று முன்தினம் காளியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது. பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.