சென்னிமலை: ஈரோடு, சென்னிமலை அருகே அய்யம்பாளையம், செலம்பகவுண்டன்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள உள்ள மாரியம்மன் கோவில்களில் பொங்கல் விழா பூச்சாட்டுதலுடன் துவங்கியது.. அதைத்தொடர்ந்து கோவில் முன் கம்பம் நடப்பட்டது. . தினமும் அம்மனுக்கு காலை, மாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து பொங்கல் விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். இரவு கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.