பதிவு செய்த நாள்
10
மார்
2014
12:03
அனுப்பர்பாளையம்: பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் குண்டம் தேர்த்திருவிழா, வரும் 12ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில், பழமைவாய்ந்த கொண்டத்துக்காளியம்மன் கோவில் உள்ளது. குண்டம் தேர்த்திருவிழா வரும் 18ல் நடக்கிறது. 12ம் தேதி (புதன்கிழமை) இரவு 10.00 மணிக்கு கிராமசாந்தி, 11.00 மணிக்கு கொடியேற்றம், காப்புக்கட்டுதல், 13ம் தேதி மற்றும் 14ம் தேதி காலை 7.30 மணிக்கு அம்மன் வீதியுலா, இரவு 7.00 மணிக்கு அபிஷேகம், தீபாராதனை, அம்மன் புறப்பாடு, 15ல் (சனிக்கிழமை) காலை 7.30 மணிக்கு அபிஷேகம், அம்மன் புறப்பாடு, 16ல் (ஞாயிறு) மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீர் கிணறு நிரப்புதல், 7.30 மணிக்கு திருக்கல்யாணம், மஞ்சள் நீராடுதல், 9.30 மணிக்கு வெள்ளை யானையில் நாதஸ்வர இசையுடன் அம்மன் புறப்பாடு, புஷ்ப பல்லக்கில் வீதி உலா.
வரும் 17ல் (திங்கள்) காலை 11.00 மணிக்கு குண்டம் திறப்பு, பூ வார்த்தல், 12.00 மணிக்கு அன்னதானம், இரவு 7.00 மணிக்கு சக்தி வேல்களுக்கு மஞ்சள் நீராட்டுதல், 9.00 மணிக்கு படைக்கல சாவடியில் பொங்கலிடுதல், 10.00 மணிக்கு குதிரையுடன் படைகலம் புறப்படுதல், 18ம் தேதி (செவ்வாய்) அதிகாலை 4.00 மணிக்கு குண்டம் பூ மிதித்தல், 8.00 மணிக்கு குண்டம் மூடுதல், சிறப்பு அக்னி அபிஷேகம், அம்மன் பூத வாகன காட்சியுடன் புறப்பாடு, மதியம் 2.00 மணிக்கு அம்மன், தேரில் எழுந்தருளல், 4.00 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சரவணபவன், தக்கார் வெற்றிச்செல்வன் செய்து வருகின்றனர்.