உத்தமபாளையம்: உத்தமபாளையம் பெரிய பள்ளிவாசலில், மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. பெரிய பள்ளிவாசல் தெருவை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு அரிசி, காய்கறி, பலசரக்கு பொருள்கள் அளித்தனர். பெரிய பள்ளிவாசல் தலைமை பேஷ் இமாம், உதவி பேஷ் இமாம், புதூர் பள்ளிவாசல் பேஷ் இமாம், மவுலவி அஹமது மீரான், சிங்கப்பூர் ஹஜ்ரத் ஷாகுல் ஹமீது மற்றும் பலர் பங்கேற்று மழை வேண்டியும், மக்கள் வளம் பெறவும் சிறப்பு தொழுகை நடத்தினர். பிரார்த்தனைக்கு பிறகு, மதிய உணவு பரிமாறப்பட்டது. ஏற்பாடுகளை ஷரீபா பேகம், முகம்மது அலி ஜின்னா செய்திருந்தனர்.