திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த ஆயந்தூரில் புதிதாக கட்டப்பட்ட பிடாரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது.திருக்கோவிலூர் அடுத்த ஆயந்தூர் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பிடாரியம்மன் கோவில் திருப்பணி முடிந்து மகா கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. இதையொட்டி கடந்த 10ம் தேதி காலை 9 மணிக்கு அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், தனபூஜை, நவகிரக சாந்தி ஹோமம் மற்றும் பூர்வாங்க சாந்தி ஹோமங்கள் நடந்தது. மாலை 6 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜைகள் துவங்கியது.நேற்று காலை 8 மணிக்கு இரண்டாம் கால பூஜை, மாலை 6 மணிக்கு மூன்றாம் கால பூஜைகள் நடந்தன. கும்பாபிஷேக தினமான 12ம் தேதி காலை 6 மணிக்கு நான்காம் கால பூஜை நடக்கிறது. பகல் 10.00 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் பிடாரி அம்மன் கோவில் மூல கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம், இரவு 10 மணிக்கு அம்மன் வீதியுலா நடக்கிறது.விழா நாட்களில் அருட்பா இன்னிசை மற்றும் நாதஸ்வர கச்சேரி நடக்கிறது.