காளையார்கோவில்: உருவாட்டி பெரியநாயகி அம்மன் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்கதர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நாளை மறுநாள் 16ம் தேதி காலை 6 மணிக்கு தேரோட்டம், மாலை மாட்டுவண்டி பந்தயம்,17ம் தேதி பூப்பல்லக்கு, தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தானம், உருவாட்டி கிராமத்தினரும் செய்து வருகின்றனர்.